மேகம்

மேகம்
-------------------
வானத்தாயவள்
வண்ணச் சேலையில்
வந்து விழுந்த
வறுமைக் கிழிசல்கள்

காற்றின் போக்கினால்
கலைந்து போன
பழுத்த கிழவியின்
வெளுத்த கூந்தல்

வான்வெளிக் கவிஞனின்
வறட்டுக் கற்பனையால்
காற்றுக் கூடையில்
வந்து விழுந்த
காகிதக் கசக்கல்

மலை முகடெங்கும்
மனிதர் மேனியில்
காற்று கொடுக்கும்
எச்சில் முத்தம்
ஈர ஒத்தடம்

வானப் பரப்பில்
வந்து வெடித்த
எருக்கிலைக் காயின்
ஏகச்சிதரல்

ஆகாயக் காட்டில்
அசைந்து நடக்கும்
தொல்லையில்லாத
வெள்ளை வாரணம்

- கரு அன்புச்செழியன்

எழுதியவர் : கரு அன்புச்செழியன் (14-Nov-17, 3:45 am)
Tanglish : megam
பார்வை : 417

மேலே