வாலிபனின் முதல் காதல்

நேற்று இரவு

மிதந்தேன் கனவு சஞ்சரிகை
பார்த்தேன் மேனகை
இடமோ உப்பரிகை
சிறகடித்தது இவ்வுலகை
பார்ப்பாய் என்றது நம்பிக்கை
உறங்க வைத்தது அன்னையின் கை

இன்று
கண்டேன் தேவதை
கூந்தல் கோதி விடுவதை
உதடுகள் சயனிப்பதை
கன்னங்கள் சிவப்பதை
விரல்கள் தாளமிடுவதை
என்னை கடந்து போவதை
என் மனம் அலை பாய்வதை
எதிர்ப்பார்ப்பதோ நாளை விடிவதை

நாளை

மனம் அடைந்தது உவகை
காணவில்லை நங்கை
வந்ததோ விழிகளில் கங்கை
அடைந்தேன் சோகை
காத்திரு என்றது நம்பிக்கை
நாளை தவறாமல் வருவாள் என் மங்கை

ராரே

எழுதியவர் : ராரே (14-Nov-17, 9:18 am)
பார்வை : 149

மேலே