காலம் முழுவதும் நீ

இளங்காற்று இவள் பெயரை என் காதில் உச்சரித்துச் சென்றது
தண்மை தருகையில் தன்னை மிகைத்தவள் அவளென்று
இவள் முகத் தோற்றம் கண்ட வட்ட நிலா வானில் முகம் சுருங்க
அருகில் இருந்த கரு மேகங்கள் இவள் சிரசில் அடைக்கலம் புகுந்தன
உப்புக் கரிக்கும் நீரும் இவள் உமிழ் நீர் கலந்து மதுரமாகும்
இவள் சிரித்தால் சிவப்பு ரோஜா மொட்டுக்கள்
மலர்ந்து நிலம் எங்கும் சிதறும்
வெண் வைரங்கள் ஒழித்து வைத்த பட்டறை அங்கு முகம் காட்ட
கோஹினூர் வைரமும் சுயம் இழந்து தன் நிறம் மாறும்
என் நினைவுகள் நிறைத்தவளே!
பல்லாயிரம் நிலவுகள் உன் பெயர் சொல்லி
என் மன வீதியில் நித்தமும் உலாப் போகின்றன
உன் கயல் விளிக் குளத்தில் விழுந்து நான் மூச்சையாகிப் போகிறேன்
நீ அருகே இருக்கையில் யுகங்களும் நிமிடங்களாகின்றன
நீ இல்லாத போது நிமிடங்களும் எனக்கு யுகங்களாகின்றன
என் உணர்வுகள் மிகைத்தவளே !
உன் பெண்மை மீது நான் கொண்ட மோகம் தணியாதது
உன் தாய்மை மீது நான் கொண்ட தாகம் தீராதது
கட்டிலில் எனக்குத் துணைவியாக காலம் முழுதும் எனக்குத் தாயாக
என் வாழ் நாளில் என்னோடு இணையாக இருப்பாயா ?
ஆக்கம்
அஷ்ரப் அலி