நட பார் காலைச்சித்திரம்
புலரும் பொழுதினில் புன்னகைப் பூக்கள்
விரியும் கதிரில் சிவந்திடும் வானம்
நடந்திடும் தென்றல் பனியின் குளிர்ச்சி
நடபார்கா லைச்சித்தி ரம் .
----பலவிகற்ப இன்னிசை வெண்பா
புலரும் பொழுதினில் புன்னகைப் பூக்கள்
மலரும் கதிரில் சிவந்திடும் வானம்
நடந்திடும் தென்றல் பனியின் குளிர்ச்சி
நடந்திடும் காலையைப் பார் !
---இரு விகற்ப இன்னிசை வெண்பாவாக ...
----கவின் சாரலன்