காதல் தந்த வலி
💐அவள் என்னை ரசிக்க என்னிடம் அழகு இல்லை..!
என் இதயத்தை நேசிக்க அவளிடம் இதயமே இல்லை..!!
💐காற்றில் கூட அவள் இருக்கிறாள் என்பதை உணர்கிறேன்..!
தூசியாய் வந்து என் கண்ணை கலங்க வைத்த போது..!!
💐பெண்ணே..!
மீண்டும் ஒருமுறை என்னை திரும்பி பார்க்காதே..;
இழப்பதற்கு என்னிடம் இல்லை..,
இன்னொரு இதயம்..!!!
💐அன்பே..!
உன்னை போல எனக்கும் கற்றுக் கொடு..;
நம்பியவரை ஏமாற்றுவதற்கு...
இனியாவது ஏமாறாமல் இருப்பேன்..!
💐அவள் என் கண்களுக்குள் வந்துகொண்டுதான் இருக்கிறாள்..!
கனவுகளாக அல்ல..;
கண்ணீராக..!!
💐மலரே..!
நீயும் நானும் ஒரே ஜாதி தான்..!!
ஏன் என்றால்..;
உன்னையும் என்னையும் வாட வைப்பது..,
ஒரு பெண் தான்..!!!
💐நான் தூங்கி பல நாட்கள் ஆகி விட்டது..!
காரணம்;
அவள் சொன்ன வார்த்தை..!!
“கனவிலும் என்னை நினைக்காதே என்று”..!!!
💐உண்மையான காதலை உணர வைப்பதும் பெண்தான்..!
உணர்ந்த காதலை வெருக்க வைப்பதும் பெண்தான்..!!
💐பெண்ணே..!
நீ அழகாய் இருப்பதால் தான் உன்னை காதலிக்கிறேன் என்று கர்வம் கொள்ளாதே..!
உன்னை அழகாக்கியதே..,
என் காதல் தான்..!!
கவிப் புயல்
சஜா. வவுனியா

