சிறக்கும் விவசாயம்
ஏர்பிடிக்கும் கைகளின்று வேலை யின்றி
***ஏங்கிநிற்கும் அவலநிலை மண்ணில் கண்டோம் !
கார்பொய்த்த காரணத்தால் பயிர்கள் வாட
***கண்ணீரில் அவர்பிழைப்பும் நசியக் கண்டோம் !
நேர்மையுடன் நம்மரசும் கவனத் தோடு
***நீதியினைத் தக்கபடி வழங்கி விட்டால்
தீர்வின்றித் தடுமாறும் நிலையும் மாறிச்
***சீர்பெற்றே விவசாயம் சிறக்கும் நன்றே !
சியாமளா ராஜசேகர்