மசக்கை நான்
உறுதியானதும்
உறுத்துகிறது மனது;
நெருக்கத்தில் நீ இல்லாத
குறையால் குடைந்தப்படி
குமட்டலுக்கான காரியத்தை
உன் காதில் கடிக்க;
ஒளித்திருக்கும் வெட்கத்தை
வெளிப்படுத்த -விழியோடு
விரலும் தேடியது கைப்பேசியை!
சிரிப்பு வெடிக்க
சிந்த வேண்டிய வார்த்தைகள்;
அழுதுப் புடைத்து...
உன் ஆறுதல் வார்த்தை
என் காதில் வீழும்வரை!
உன் பெருமூச்சின் வெப்பத்தில்
கைப்பேசியின் சூடு
காதை தொட - தொட முடியா
தூரத்தில் நீயும் நானும்!!
வெளிநாட்டில் நீ!!!