தமிழே அழகே

தமிழே அழகே அழகே உலகின் அழகே அழகே/
தாய் மொழயின் விழியாய் இருக்கும் அழகே அழகே//
உலகம் முழுவதும் பரவி அறிவு கண் திறக்கும்//
உன் மொழயின் அன்பும் அழகே
அழகே//
உன் மொழியின் உறவுகள் //உலகத்திலே பரவி பிரிந்து இருந்தாலும்//உலகின் அத்தனை மொழியின் புரிதலாக நீ இருப்பது அழகே அழகே
நெஞ்சுரம் நமக்கு ஊட்டி //கருணையை எமக்கு அளித்து//பிறர் பசியை போக்கும் உணர்வை நெஞ்சில் ஊட்டி //மொழயின் சிறப்பை உயர்த்தி// தமிழின் பெருமையை அழகாக்கும் அழகே அழகே
எத்திசையில் புகழ் மணக்க//
எத்திசையிலும் வாசம் வீச//
சிந்தனைகளோடு உறவாடி
எழுத்து முத்துக்களில் ஊடல் கொண்டு
இலக்கிய குழந்தைகளை பிரசவித்து // வாசம் வீசும் தனித்துவம் அழகே அழகே

எழுதியவர் : காலையடி அகிலன் (17-Nov-17, 10:53 am)
Tanglish : thamizhe azhage
பார்வை : 201

மேலே