காதல் புரிதல்
கனவிலும் கற்பனை தந்தவள்
விழிகளின் சூட்சுமம் என்னவோ...?
சுட்டு விரலால் துண்டாடிப்போனது
இதயம்
சீதையை தேடிய ராமனா...?
ராவணன் தீண்டிய சீதையா....?
இரண்டும் அவள் தான்
காதல் என்றால் என்ன...?
மனைவி என்றால் என்ன...?
வாழ்க்கை என்றால் என்ன...?
மூன்றும் ஒரு வட்டம்
புரியாமல் புணர்கிறது கார்மோன்களின் இஷ்டத்தில்...
மீதி காதலை யோசித்தால்
பித்தனாக வேண்டும் - அல்லது
பிரமச்சாரியாக வேண்டும்
காதலில் கடனாளியாக விரும்பவில்லை
ஆனாலும்
என்னை நேசிக்கும் ஒரு ஜீவனும் அவள் தான்..