என்னுயிரைப் பறித்துக் கொள்

உன் கரு விழிக் கணைகளால் என்னைத் தலை சுற்ற வைத்தாய்
கதிர் நிலவாக ஒளிரும் முக விளக்காலே கண் கூச வைத்தாய்
இடை வளைவாலே செய்த வில்லாலே என் நெஞ்சைக் கூறு போட்டாய்
என் இரவுகவளில் நீளும் நினைவுகளில்
உன்னோடு நான் பயணிக்கும் கனவுகளில்
வெண்ணிலா வந்து நீ அழகி என உனக்கு கிரீடம் சூட்டும் போது
கரு முகில்கள் உன் கூந்தலுக்கு காணிக்கையாக
அருகிலிருந்த இரு விண்மீனகளை பெயர்த்து
உன் செவிகளுக்கு அணிவிக்கும் போது
என்னிடம் உனக்குத் தர என்ன தான் இருக்கிறது
எஞ்சியிருக்கும் என்னுயிரைத் தவிர
அதையும் நீ எடுத்துக் கொள் எத்தனை நாட்களுக்குத்
தான் நெருஞ்சி முட்களாய் கிழிக்கும்
உன் நினைவுகளை சகித்துக் கொண்டு இந்த மண்ணில் அது வாழும்
ஆக்கம்
அஷ்ரப் அலி