முதல் பார்வை
உன்னை பார்த்த முதல் பார்வையிலேயே
என்னுள்ளத்தில் நீ வந்தமர்ந்து விட்டாய்
நீதான் என்னவள் என்று என் உள்ளம்
சம்மதமும் தந்தது .........நேசமும் தந்தது
காதலும் தானாய் வந்து மலர்ந்தது
நீ யாரோ, எந்த ஊரோ, யாது குலமோ
மதமோ இவை ஒன்றும் நான் அறியவில்லை
என் மனமும் இவற்றை நாடவில்லை -உந்தன்
பார்வையில் ஆசையும், அன்பும் ததும்பி நிற்க
என் மனம் அதை நாடி அதில் நனைய விழைந்தது
எந்தன் காதல் பொருளொன்றும் தேடி அலையா
காதல், உந்தன் அரவணைப்பை நாடி நிற்கும் காதல்
மாசிலா உண்மைக்கு காதல் .............இதோ எந்தன்
கருவிழி பார்வை இதை சொல்லும், ஏற்றுக்கொள்வாயோ
எந்தன் காதலை, இந்த பார்வை தூதுக்கு
பதில் சொல்லடி பெண்ணே உந்தன் பார்வையால்
தீர்க்கமாய் என்னை நோக்க உன் காதலாய் !