முதல் தோழி

ஐந்தரை வயது எனக்கு
அப்போது
என் முதல் தோழியாய் நீ

எதிரெதிர் வீடுகளில் வசித்திட
தினம்
உன் பெயர் சொல்லியே
அழைத்திடுவேன் விளையாடிட..

இன்றும் ஞாபமிருகிறது
அந்த கட்டிமுடிக்கப்படாத வீடு..

அங்கே குவிக்கப்பட்டிருந்த மணற்குவியல்களும், அதில்
செடிகளும் பூக்களுமாய்
சிறு நந்தவனம் போல் காட்சியளித்துக்கொண்டிருக்கும்..

"பூக்கள் கொஞ்சம் பறித்து
கடுகுச்செடியென்று ஒன்றுண்டு
அதன் காய்கள் சேர்த்து
வாடாமல்லி அதன் இலை
நெருஞ்சிமுள் பூ என
அத்தனையும் கொண்டு
சிறு கடை வைத்திருப்பேன்
நீ காய்கறி வாங்குவதாய் வருவாய்..

அரிசி நீ கேட்பாய்- மணல்
அள்ளி நான் கொடுப்பேன்..

இருப்பதையெல்லாம் கேட்டு
எல்லாம் வாங்கிச்சென்று, பின்
என்னிடமே கொடுப்பாய்..

மணற்குவியலின்
ஒருபுறம் நீ
மறுபுறம் நான்
ஆளுக்கொருபுறமாய் தோண்டி
சிறு சுரங்கம் அமைத்திடுவோம்
பின் அடுத்த எதிர்பக்கட்திலிருந்து
கைகள் குலுக்கிடுவோம்...

இன்னும் எத்தனை ஞாபகங்கள் தோன்றுகிறது..
அந்த கட்டிமுடிக்கப்படாத வீட்டை
இன்று கண்மூடி காண்கையில்..

நினைவுகள் தொடரும்....

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (19-Nov-17, 7:38 pm)
Tanglish : muthal thozhi
பார்வை : 543

மேலே