மனிதம் முழுங்கிவிட்டது
மறித்து போய்விட்டது மனிதம் :
புரிந்து போய் விட்டது மனிதன் படைப்பில்
இறைவன் போட்ட தப்பு கணிதம் ..
எந்த உணவையும் சமைத்து உண்பதில்லை
இருப்பினும் மகிழ்ச்சிக்கும் சுவைகளுக்கும் குறைவே இல்லை
பகிர்ந்துண்ணும் பழக்கத்தால் பறவைகளின் கூட்டங்களுக்கு
சமைத்த உணவுதான் இருப்பினும் உண்பதில் மகிழ்ச்சி இல்லை
குப்பை தொட்டியில் மனிதர்களின் கூட்டங்களுக்கு .