அவளற்ற நான்
அமுது அற்ற தழிழ்
அவளற்ற நான்.....
ஆதி அற்ற அந்தம்
அவளற்ற நான்.....
இதம் இழந்த தென்றல்
அவளற்ற நான்....
ஈகை மறந்த நெஞ்சம்
அவளற்ற நான்.....
உரிமை உதிர்ந்த உறவு
அவளற்ற நான்.....
ஊமை பாடும் கீதம்
அவளற்ற நான்....
என்பு இலா தேகம்
அவளற்ற நான்....
ஏற்றம் காணா தேசம்
அவளற்ற நான்.....
ஐ அற்ற பெண்மை
அவளற்ற நான்....
ஒழுங் கு ௐதா கல்வி
அவளற்ற நான்.....
ஓரங் கட் டிய ஓடம்
அவளற்ற நான்.....
ஔடதம் ஏற்கா பிணி
அவளற்ற நான்......
அஃகேனம் இழந்த எஃகு
அவளற்ற நான்......