தகிட தகிட தகிட தகிட

பூமியில்...
நந்தவனப் பூச்செடிகள்
பூச்சொரிய வான் மழை
பெய்யும் மழை மாதம்...
அது... நெருப்பு சுட்டாலும்
கண்களுக்கிதமாய் தீப
ஒளிதரும் கார்த்திகை மாதம்...

தென்றலுக்குப் பஞ்சமில்லை
பொதிகை மலை அருகிலிருப்பதால்...
நன்னீருக்குப் பஞ்சமில்லை
தாமிரபரணி சில பர்லாங்குகளில்
பாய்ந்து ஓடுவதால்...

நீர் நிலம் நெருப்பு
வான் காற்று வாழ்த்திட
இப்பூவுலகில் உதிக்கும்
வாய்ப்பு கிடைப்பதில்லை
எல்லோருக்கும்...
கல்லிடை நகரத்தில்
கார்த்திகை மாதத்தில்
இவையெல்லாம் அங்கு
பிறப்பவர்க்கு சாத்தியமே...
அங்கு பிறந்திட்ட கோம்ஸ்
கொடுத்து வைத்தவர்...
கல்லிடை நகரம் அதைவிடவும்
கொடுத்து வைத்தது...
கோம்ஸ் கல்லிடை ஊரின்
பேர்சொல்ல நல்லதொரு
பிள்ளையாய்ப் பிறந்ததால்...

ஆறு காண்டங்கள் ராமாயணத்தில்..
ஆறு கண்டங்கள் இப்பூவுலகில்...
படித்த கதாபாத்திரங்கள்
பார்த்த மனிதர்கள்
அறிவால் ஆற்றலால்
கலையார்வத்தால் நட்பால்
தன்மையான குணநலன்களால்
வெகு சிலர் மட்டும்
மனம் கவர்ந்தவர்கள்..
அவர்களில் ஒருவர்...
அதுவும் ஒப்பில்லாதவர்
கோமதி என்ற கோம்ஸ்...

கல்வியில் சிறந்தவர் என்கிறது
முனைப்புடன் கோம்ஸ் பெற்ற
முனைவர் பட்டம்...
செல்வச்செழிப்பில் சிறந்தவர் என்கிறது
இவரணியும் ஆடை அணிகலன்கள்..
ஆரோக்கியம் பேணுவதில்
சிறப்பானவர் என்கிறது
நித்தம் நித்தம் காலையில்
இவர் செய்யும் யோகா...

இனிய உளவாக இன்னாத கூறல்
கூடாதென்றார் வள்ளுவர்
இவர் கூறுவனவெல்லாம்
இனியதென இனிமையாய்
இவர் சொல்லும் காலைவணக்கம்
இயல்பாய்ச் சொல்லும்...

மது... கொடுத்து வைத்தவர்
அக்கா இவராகிட...
பெற்றோர் பாக்கியசாலிகள்
மகள் இவராகிட...
விக்கி அதிர்ஷ்டசாலி
அன்னை இவராகிட...
ராம்ஸ் தவமிருந்தவர்
அவரில் பாதி இவராகிட...
மாணவர்கள் மாண்பினராகினர்
பேராசிரியர் இவராகிட...
ஜிஸிஇ பெயர்பெற்றது
மாணவி இவராகிட...
நண்பர்கள் பெருமை பெற்றனர்
தோழி இவராகிட...
தகிட தகிட... தகிட தகிட...
இசைக்குயில் கோம்ஸின்
இனிய குரல் கேட்க
புல்லாங்குழல்கள் கூட
காற்றலைகளைத் தூது விடும்...

கோம்ஸ்க்கு இனிய
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..
வளங்கள் அனைத்தும் பெற்று
வாழ்க பல்லாண்டு!
👍🙋🏻‍♂😀🙏🍰🎂

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (22-Nov-17, 10:46 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 287

மேலே