பூமியின் மரணம
பூமியின் மரணம் !
மரங்களை அழித்தோம் வெப்பத்தை ஏற்றோம் ?
மண் , மணல் எடுத்து வீடு கட்டவும்
பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும்
ஆறு ,குளம் ,ஏரி போன்றவைகளின்
சுவர்களை இடித்து அவைகள் இருப்பிடத்தில் நம் வசிப்பிடத்தை உருவாக்கி அவைகளை அழித்து அடக்கி நீரை பாட்டிலில் அடைத்து பெருமைகொண்டோம் !....
காற்றை காசாக்கிறோம் (அலைக்க்ற்றை)
ஆகாயத்தையும் ஆராய்ச்சி என்ற பெயரில் விஞ்ஞான தவற்றின் குப்பைகள் கொட்டும் இடமாக மாற்றினோம் ......
நெருப்பை அணு உலை புகைகளாக மாற்றி சிறு சிறு உயிரினங்கள் முதல் மனித உயிர்கள் மட்டுமின்றி காற்றையும் மாசுபடுத்தினோம் ...
வளர்ச்சி வளர்ச்சி .....அழிவின் உச்சிக்கே வந்துவிட்டோம் ....இனி எந்த அவதாரமும் வந்து பயநில்லை , யார் அவதரித்தும் பயநில்லை ......
அழிவே மறுசுழற்சிக்கு வித்திடும் ஆயுதம் ...
அழிவே புதிய உலகின் ஆரம்பம் ....
Earth : I am waiting for recycle of the world ...