மயக்கம்

கண்களை மூடினேன் உன் முகம்,
கண்களை திறந்தேன் என் அம்மாவின் முகம்,
காதை மூடினேன் என்னை மயக்கிய உன் பேச்சு,
காதை திறந்தேன் என்னை கோவப்படுத்திய அம்மாவின் திட்டு,
என்னை கோவப்படுத்தியதாய்
இருந்தாலும்,
நல்வழி படுத்தியது
என்னை மயக்கிய உன் பேச்சல்ல..
என் அம்மாவின் திட்டுதான்....
- ஜெகபதி -
அரசு உயர் நிலைபள்ளி
பவித்திரம்