மீண்டும் ஒருமுறை வாழவேண்டும்

எனக்காக அவளது
உறவுகளை விடுவித்தவள்
எனக்காக அன்னையென
தன்னையே வடிவமைத்தவள்
இன்பத்திலும் துன்பத்திலும்
சரிபாதி நம்இருவருக்குத்தான்
வீணான கடுங்கோபம்
பொறாமை இனிநமக்குஏன்
பிரிந்தாலும் சேர்ந்தாலும்
நம்உயிர் எப்போதும்ஒன்று
வார்த்தைக்காக நான்
கூறவில்லை நீஎன்னுயிரென்று
வாழ்வதற்காக நம்
நாற்கரங்களை பிணைத்தேன்
ஒன்றாய் இறப்புநேரவே
உன்னைக் கட்டியணைத்தேன்
இப்படித்தான் வாழவேண்டுமென்று
ஊரெல்லாம் வாய்ப்பேச்சு
கேட்டுமகிழ்வதற்கு நம்மிடம்
இல்லாமல்போனதடி உயிர்மூச்சு !...