மனதை வருடும் ஞாபகங்கள்

மனதை வருடும்
*****************
ஞாபகங்கள்
***************
அந்தி பொழுது மயங்கும் மாலைப்பொழுதில்.........
நாமிருவரும்
சென்ற அந்த கடற்கரையின்......
அந்த மாமரத்தின் கீழ் அமர்ந்தேன்
வழமை போலவே தனியாக
அல்ல .........
ஆனால் .............
நீயும் என்னருகில் என்னுடன் அமர்ந்திருந்தாய்....
அப்படி ஒரு பிரம்மை என்னுள்
உன் பெயரைச் சொல்லி அழைக்க வேண்டும் போல் இருந்தது..
ஆனாலும்.....
நான் என்னுள் மெளனித்துப் போனேன்
ஏனென்றால்
என்னருகில் ......
நீயல்ல ........
நிஜமாக என்னவள்