அன்பே கடவுள்
இதயங்கள் பூட்டிக்கொண்டு
இருமனங்கள் பயணிக்கும்
இல்லற பாதையினில்,
அன்பென்னும் அச்ச்சாரம்
அவசியம் வேண்டுமே !!!
அதுவே இல்லாதபட்சத்தில்
இருக்குமிடம் தெரியாத
இறைவனுக்கு பூஜைசெய்து
விளக்கேற்றி அலங்கரித்தால்
இலக்கினை வெகுவிரைவில் அடைந்திடலாம்
என்ற பகல் கனவும் பலித்திடுமோ ??
பாதையினில் மேடுபள்ளம் வருவதுமே
இயல்பான ஒன்றுதானே
அதற்கு கூச்சலிட்டு குழம்பி நின்றால்
பயணங்களும் தடைபடுமே !!
இதயத்தில் இன்பமென்ற ஒளிவீச
இல்லத்தினில் இனிமைகள் கூடுமே !!
இறைவனும் இறங்கிவந்து உன்னுடன்
வாழ்ந்திட ஆசைக்கொள்வானே !!!
கொஞ்சம் பக்குவமாய் புரிதலுடன்
உன் பயணத்தை தொடர்ந்திடு
நீ கண்ட கனவுகளும் மேய்ப்பட்டு
பயணத்தை சிறப்பிக்கும் !!!
- திவ்யா சத்யப்ரகாஷ்