இறந்துவிடாதே பிரிந்துவிடாதே

உங்களுக்கான நிலம் இதில் நீயே உயிரை மாய்க்கலாமா ?
சாதிக்க துடிக்கும் உயிரே நீ சாவதை பற்றி நினைக்கலாமா

பாடு பட்டு சுமத்தவளை பற்றி நீ மறக்கலாமா
உற்ற துணையாய் இருந்தவரை விட்டு நீ பிரியலாமா

இங்கு சாதிக்க தான் இடம் இல்லையா ?
நீ சாவதை பற்றி நினைப்பதற்கு

ஒரு நிமிடம் மட்டும் யோசித்துப்பார்
சாதிக்க வழிகள் நிறைய இருக்கு

தமிழை கொஞ்சம் படித்து பார்
தைரியம் தன்னால் வந்துவிடும்

உன்னையே நீ உயர்த்தி பார்
உன் உயிரும் உனக்கே வந்துவிடும்

கண் இல்லாதவரும் வாழ்வதுண்டு
என் கண்ணே உனக்கு ஏது குறை

நம் தமிழை நன்றாய் வளர்த்துவிட
நீயும் உயிரோடு இருந்துவிடு

எழுதியவர் : வான்மதி கோபால் (25-Nov-17, 4:28 pm)
சேர்த்தது : வான்மதி கோபால்
பார்வை : 176

மேலே