விலைவாசி
குழம்பு கரண்டியில
சோறு வச்சி
நெய் கரண்டியில
குழப்பு ஊத்தி
முழு சாப்பாடுனு
பேரும் வச்சி
பில்ல பாத்தா
வயிறு நெறஞ்சி
போச்சி...
கனவு இல்லம்
மறந்து போச்சு ..
இல்லமே வெறும்
கனவுன்னு ஆச்சு
தேர்தலும்
முடுஞ்சி போச்சு...
தேறுதலும்
இல்லனு ஆச்சு ..
இவங்க ஆள
பட்டு கம்பளம்
விரித்தோம் அன்று
விலைவாசி நம்மை
படுக்க வச்சி கம்பளம்
விரிக்குது இன்று
நடுத்தர மக்கள் .
நடு தெருவுல வந்தாச்சு
விலைவாசி பாத்து
விழிபிதுங்கி நின்னாச்சு
துப்பு கெட்ட அரசு
தூங்குது இன்று ...
மக்கள் உயிரை
வாங்குது இன்று..
ஆமா சில இடத்துல
விலையை வாசிக்க..
மட்டும்தான் முடியும்..
வாங்க முடியாது…
விலைவாசி கண்டும்
காணாமல்
தன்னினம் மாய்க்கும்
தறுதலை ஆட்சி
எதற்கு தூக்கி எறி...
அன்றாடம் வழக்கை
ஓட்ட அல்லல்
படுது நம்ம கூட்டம்..
வயித்து பிரச்னை
பார்க்கவே நேரமில்ல
நாட்டு பிரிச்சனை
எங்க கண்டுகொள்ள..