நான் யார்

நான் யார்


என் அமைதியின் அர்த்தங்கள் புரியாத புதிர்கள்
அதற்கென்று எந்த அகராதியும் இல்லை
நான் அர்த்தமுள்ள மனிதனும் இல்லை
நான் வெற்றியை தேடும் பயணியும் இல்லை
தோல்வி எனது கூடாரமும் இல்லை
நான் விடை தெரிந்த ஒரு கேள்விகுறி
அந்த விடையும் ஒரு கேள்விகுறி


நான் தனிமையின் காதல் நாயகன்
எனது உருவம் உனக்கு பரிதாபம் என்றால்
எனது வார்த்தைகள் உனக்கு நகைச்சுவை என்றால்
எனது உணர்ச்சிகள் உனக்கு வேடிக்கை என்றால்
நீயே இவ்வுலகின் மிக சிறந்த முட்டாள்


என் கோவ கனலில் பலியிட இங்கு ஆட்களுக்கு பஞ்சமில்லை
என் அன்பிற்கு தகுதியுடன் இவ்வுலகில் எவரும் இல்லை
என் வாழ்கை நண்பர்களால் செதுக்கப்பட்ட ஒரு வெண்கல சிலை
வெற்றியோ தோல்வியோ அதன் சிம்மாசனம் அவர்களுக்கே சொந்தம்


நான் காகிதத்தில் செய்த கப்பல், நீரில் வாழும் நிழல்
அன்பை தேடி அலையும் ஒரு பறவை
கற்பனையில் வரைந்த ஒரு ஓவியமும்
மற்றவர்கள் என்மீது கொள்ளும் பரிதாபங்களே நான் செய்யும் பாவங்கள்
என் கனவுகளுக்கு எல்லை என்பது இல்லை
என்னை கட்டுபடுத்த எவருக்கும் உரிமை இல்லை
நான் கட்டுண்ட மனிதனும் இல்லை




இப்படிக்கு நான்

(ஜெயராமன் ஏ)

எழுதியவர் : (27-Nov-17, 9:26 pm)
சேர்த்தது : Jayaraman E
Tanglish : naan yaar
பார்வை : 106

மேலே