அவள் அழகானவள்
மையழகு மங்கை - அவள்
மெய்யழகு நங்கை.- கம்பனே - என்னவள்
நீருக்குள் நீந்தும்
மீன்விழிக் கொண்டவள் - என்
நெஞ்சுக்குள் நிழலாடும்
நிலவு முகம் கொண்டவள் - அந்த
பசுமேனி வாழைப் போல்
பருவ அழகு கொண்டவள். - சிதறா
கண்ணாடிப் போல் இருப்பவள். - அதில் என்னை
கண்ணெடுத்துப் பார்க்க வைப்பவள்
காந்தம் போல் ஈர்ப்பவள் - காணாமல் போகும்
காதலை விதைப்பவள்.
தூரிகை தொட்ட ஓவியமவள் - இருளிலும்
தூங்கா விளக்காய் தெரிபவள்
இமைகள் மூடிய விழியில் - கனவு தேவதையாய்
இரவு முழுவதும் இன்பம் தருபவள்.
தூங்குவது நானா? - அவளழகால்
தூங்காமல் துடிப்பது இதுதானா?
எதற்க்காக என் கண்ணில் பட்டாள்?
என்னை கவிஞனாக்கவா மீட்டாள் - மொத்தத்தில்
அவளுக்காக அழகா?
அழகுக்காக அவளா? - எதுக்காக எதுவென்று
எடைபோட முடியாதவள் - கம்பா - கவிதையில்
தடை போடும் வார்த்தைகள் கூட
தயக்கம் இல்லாமல் - அவளழகின்
மயக்கத்தில் மோக மோனையுடன்
தாகம் தணிய தாளினை நனைத்தேன்
தோலுக்குள் மறைந்திருக்கும் பழமானவள் - என்
துக்கத்தை போக்கவந்த அழகானவள்.