பட்டு

பட்டு
அல்லி இதழ் விரியும் அல்லிகுளத்தில்
ஆதவன் குவிந்திடும்
அழகான நேரத்தில்
பழையசோறும் பொதிசுமந்து
பங்குனி பொழுதின் வாசல் கடந்து
பாலாறு கரையின் வாழைத்தோட்டத்தில்
பணியைத் தொடங்கினான்
வந்தியன்......
இளங்காலைத் தொடங்கி
இளமாலை வரை
இடைவிடா வியர்வை சிந்தி
இந்திர முதலாளியின்
இடம் வலம் சுற்றி சுற்றி
இரு நூறு சம்பளம் வாங்கி
இரண்டே நிமிடத்தில்
வீட்டிற்கு புறப்பட்டான்....
பாதை விரிய
பட்டாடை கடை நிறைய
தன் மனைவி பட்டுவின்
முத்தான முகம் தொிய
பச்சை பட்டை வாங்கி
பொதி சுமந்தான் வந்தியன்.....
இளவேனில் உதிக்கும் நேரம்
இன்று அவள் பிறந்ததினமென்று
அறிய
இடைவிடாது மனம் முழுதும் அது நிறைந்திருக்க
இருநூறு ரூபாய் கூட வாங்க
உடனே ஓடி பட்டும் வாங்க
ஒருநாளுமில்லா சந்தோஷத்தை அடைந்தான் வந்தியன்.....
கணநேரம் நடந்து
காாிருள் நேரம் வீட்டையடைந்தான்
கைகள் கொண்டு அவள் கண்ணை மறைத்தான்
கன்னல் பேச்சிற்கு பின்னர்
பட்டுவிற்கு பட்டைக் கொடுத்தான்...
ஆனந்த கண்ணீர்
அவள் விழியிலிருந்து பாதைதேட
அதை ஓடிச்சென்று
அவன் கைகள் தாங்க
பட்டுவிற்கு கிடைத்த முதல் பிறந்தநாள் பரிசு அது......
- சஜூ

எழுதியவர் : சஜூ (27-Nov-17, 8:24 pm)
சேர்த்தது : சஜூ
Tanglish : pattu
பார்வை : 93

மேலே