என்னவளின் வாழ்க்கை
மெட்டி ஒலியில்
மெல்லிசைக் கேட்டவளே
கார்மேகக் கூந்தலில் மணம்
கமழும் பூச் சூடியவளே.
நெற்றி வானத்தில்
நிலவு பொட்டு வைத்தவளே
கால் கொலுசில்
நூலிடை அசைந்து
நடந்தவளே.
விதவிதமான
வண்ண சேலையில்
வானவில்லாய் ஜொலித்தவளே.- இன்று
வீதியில் அல்லவா உன் மண
வாழ்க்கை அமைந்து விட்டது.
பானை உடைந்தாற்போல் - உன்
பருவமும் பாழாகிப் போனதே.
வண்ண ரோசாவாய்
வாலிப உள்ளங்களை
வலிய ஈர்த்தவளே - இன்று
வெள்ளை ரோசாவாய்
வலம் கொண்டு வருகின்றாயே.- என்
விழியெல்லாம் நோகுதடி
வற்றாக் கண்ணீர் கடலைக் கொட்டுதடி.
விலாசம் மாறி விட்டதால் - நீ
வாழ்விழந்து தவிக்கின்றாயே
வந்துவிடு என்னோடு என்றேனே - அன்று
நொந்து விட்டாயே என்கண் முன் இன்று.
காதலுக்கு முகவரிக்கு கேட்டேன் - நீயோ
கல்யாணத்துக்கு முகவரி தேடி மாலை சூடினாய்
கல்யாண மாலை வாடியதும் தனிமையை நாடினாய்