இனி ஒரு காதல்
இனி ஒரு காதல்
எனக்கென்றும் வேண்டாம்
வரும் ஜென்மம் எதிலும்
அதன் துணை வேண்டாம்
கண்ணும் கண்ணும் பேசும்
பொய்கள் எனக்கு வேண்டாம்
காலம் தொலைக்கும் தனிமை
காதலால் எனக்கு வேண்டாம்
உண்மை நேசமென்று
என்னை நம்ப வைத்து
உறவை தொலைக்க வைக்கும் காதல்
நிஜமாய் எனக்கு வேண்டாம்
உனக்கு நான் எனக்கு நீ
என இருவர் வாழ
இத்தனை பெரிய உலகம் இழந்து
உன்னை உலகம் என நம்ப வைக்கும்
மாயை காதல் வேண்டாம்
காதல் காதல் காதல்
என்று இழந்தவை ஏராளம்
பெற்றதோ உன்னை மட்டும்
கிடைத்ததோ வாழ்நாளில்
தனிமை மட்டும்.....
நேற்று வெறுத்தவை
இன்று விரும்பலாம்
இன்று விருப்பங்கள்
நாளை வெறுக்கலாம்
இன்று விரும்பி நாளை வெறுத்தால்
தொலைத்தவை கிடைக்குமா
காலம்தான் திரும்புமா...
போதும் போதும் காதல்
கானல் நீர் சாதல்
பட்டவரை சேதம்
எனக்கு அது போதும்
இனி ஒரு காதல் வேண்டாம் ...