நீ நான்

நீ... நான்
வானத்தை பாா்க்கும் நதி நீ
அதில் வாடாமல் நிற்கும் தாமரை நான்
கண்கள் கூசும் மழைத்துளி நீ
அதில் நனைந்திட துடிக்கும் காா்மேகம் நான்
மௌனங்கள் குவியும் மொழிகள் நீ
அதில் குவியமிலா தோன்றிடும் கவிதை நான்
காா்காலம் தேடும் மின்மினிபூச்சி நீ
அதில் காவல் நிற்கும் முழுமதி நான்
மண்னை நேசிக்கும் புற்கள் நீ
அதில் மௌனம் சாதிக்கும் கற்கள் நான்

எழுதியவர் : சஜூ (28-Nov-17, 8:52 am)
சேர்த்தது : சஜூ
Tanglish : nee naan
பார்வை : 121

மேலே