உனக்கு புரிகிறதா

தோழி ஏதோ ஒன்றை மும்முரமாக சொல்லிக் கொண்டிருந்தாள்.
என்ன சொன்னாள்?
மீண்டும் கேட்டால் திட்டுவாளே...
நான் சொல்லும் பொழுது மேடம் என்ன யோசனைல இருந்தீங்க?
என்று கேட்டு கிண்டல் செய்வாளே...
என் தோழிகளை பார்த்து சிரித்த நானா இது என்று.
இன்று என்னை நானே கண்ணாடியில் பார்த்து சிரித்துக் கொண்டேன்.
என்னடி தனியாக சிரித்துக் கொண்டிருக்கிறாய்.
மேடம் அவர நினைச்சிட்டு இருக்கீங்களா.
இது தெரியாம தொண்டை தண்ணீர் வத்த சொன்னேனே.
ஏ பட்டுக்குட்டி
திருப்பியும் ஒரு தடவை
சொல்லுடி...
ஆள விடுடி சாமி...
காதலிக்கற பொண்ணுல்ல.
உன்ன மாதிரி கல்யாணம் நிச்சயமான பொண்ணுக்கிட்டயும் எதுவும் சொல்லக்கூடாது.
உன் உடம்பு தான் இங்க இருக்கு .மனசு முழுக்க
அவரையே சுத்திக்கிட்டுருக்கு.
வீரவசனமெல்லாம் பேசின.
கல்யாணத்துக்கு முன்னாடி எங்கேயும்
உங்களோடு சுத்த மாட்டேன்னு .இப்ப பாரு எப்பயும் அவர் நினைப்புலயே இருக்க.
அவரோடு சுத்த மாட்டேன்னு தானே சொன்னேன்.
அவரை நினைக்க மாட்டேன்னு சொல்லலயே.
அவரை நினைக்க கூடாதுன்னு தான்
நினைக்கிறேன்.
ஆனால் நினைக்காமல் இருக்க முடியல.
நான் என்ன மட்டுமில்ல.
என்ன சுத்தி இருக்கிற
இந்த உலகத்தையே மறந்துடறன்.
அவர நினைக்கும்போது.
இது பேர் தான்டி காதல்...
நீ அவருக்குள்ள
உன்னையே இழக்கற.
அவருக்காக
எதையும் செய்வடி
என் கள்ளி.
ஐய்யோடா
வெக்கத்தை பாரேன்.
இவ்ளோ நாள் இந்த வெட்கம் எங்க இருந்தது.
நீ இப்படியே கனவுலயே இரு மேடம்.
நான் அம்மாவ பார்த்துட்டு வாரேன்.என்று என்னை உலுக்கி.
இங்கே தானே இருக்கிறாய் என்று கேட்டு சிரித்தாள்.
இங்கே தான்டி இருக்கேன்.
பாத்துட்டு வா...
என்று கூறி முடிக்க.
என்னை பார்த்து புன்னகைத்தபடி சென்றாள்.
மீண்டும் என்னை அவர் ஆட்கொள்கிறார்.
சரியாகத் தான் புரிந்து வைத்திருக்கிறாள்.
என் தோழி என்னை.
புத்தகம் எடுத்து
அவரை படிக்கிறேன்.
நடக்கிறேன்
அவர் நினைவுகளோடு.
கண்மூடுகிறேன்
அவரை நினைத்தபடி.
கனவிலும் வந்து எட்டிப் பார்க்கிறார்.
கண் விழிக்கிறேன்.
அவரை பார்ப்பதற்காகவே.
காதல் பாடல்களை கேட்கும் பொழுது
என் அருகில் அமர்ந்து சிரிக்கிறார்.
நான் பிடிக்க போகும் பொழுது
ஒளிந்து விளையாடுகிறார்.
யார் குரல் கேட்டாலும்
அவர் குரலாகவே கேட்கிறது.
யார் அழைத்தாலும்
அவர் அழைப்பது போலவே உள்ளது.
என் வாழ்நாள்
அவர் இதயத்தில் ஆரம்பித்து
அவர் மடியில் முடிவதை காண்கிறேன்.
எத்தனை பிறவி எடுத்தாலும்
அத்தனை பிறவியிலும்
அவர் மனைவியாகவே
அவரோடு வாழ்கிறேன்...
பூக்களெல்லாம் எங்கள் மீது பூமழை பொழிவதை உணர்கிறேன்.
~ பிரபாவதி வீரமுத்து