ஆசானுக்கு ஒரு கடிதம்
நினைவுகளாய் மாறிப்போன பாடசாலை பருவத்தில்//
அறிவை வளர்த்துவிட்டு சென்ற ஆசிரியைக்கு ஓர் கடிதம் //
விட்டு போன
உணர்வு வந்து பந்தாடுகையில்//
உணர்வுகள்
நிழலின்றி தனிமையில் நடக்கின்றது குருவே
பாடசாலை வாழ்வினில் வசதி
இல்லா ஏழை
உள்ளதை சொல்லிட முடியாத பாவை
உள்ளுக்குள் உருகிடும் உணர்வுள்ள ஊமை
கல்வியை பெற்றிட தினமும் துடித்த ஊமை
நாட்கள் நகர்ந்ததும் குறைகள் தெரிந்த கணம்
இழந்ததை பெற்றிட நினைத்த மனம்
கண்முன்னே நிழலாக நிற்க
உன் நலம் அறிந்திட ஆசை
உன் தியாக கடமையை பாராட்டிட ஆசை
இப்படிக்கு உன் மாணவன்