வீதியில் நீ நடந்தால்

வீதியில் நீ நடந்ததால்!!!!


நட்சத்திரங்களுக்கெல்லாம் ரசிகை ஆகிவிட்டாய் நீ
கையெப்பம் கேட்டு ஒரு பெரும் கூட்டமே காத்திருக்கின்றன உனக்காக
கொஞ்சம் அண்ணார்ந்து பார்
நிலவும் உன்னோடு புகைப்படம் எடுக்க ஏங்கிக்கொண்டிருக்கிறது
தனிமையில் நீண்ட நேரமாக

வீதியில் நீ நடந்தால்!!!

உலகில் இருக்கும் காற்றெல்லாம் மோட்சம் கொண்டன
தவம் கொண்டு உன்னை சுவாசித்தால்

உன் மீது விழாத வருத்தத்தில் தற்கொலை செய்து கொள்கின்றன
உன் குடை மீது விழுந்த மழை துளிகள் எல்லாம்

தார்சாலைகள் எல்லாம் காதல் பாதையில் விழுந்து விட்டன
உன் பாதம் தொட்ட நொடியில் இருந்து.

சுடும் சூரியனை எதிர்த்து கடும் போராட்டங்கள் நடத்துகின்றன
மேக கூட்டங்கள்

உலவும் மேகங்களுக்கெல்லாம் ஆசை உன் மீது விழ நிழலாய்

வீதியில் நீ நடந்ததால்!!!

பட்டம் பூச்சிகளெல்லாம் தவம் கொள்கின்றன
உன் இமைகளாய் இருந்து சிறை பட்டு தினம் சிக்கி பறக்க

வீதியில் நீ நடந்ததால்

உன்னை பார்த்த ஆடவன் இதயமெல்லாம்
கெட்டிமேள கொட்டு கொட்டுகின்றன
கரம் பிடிக்கும் வரம் கிடைக்குமா என்று



வீதியில் ஏன் நடந்தாய் பெண்ணே !!
வீதியில் நீ நடந்ததால் உலக வீதியே இப்பொழுது உன் பின்னல்!!!

எழுதியவர் : ராஜேஷ் (29-Nov-17, 10:32 pm)
பார்வை : 184

மேலே