தனிமை

தனிமையில் உடல் வாட
மனம் சோர்ந்து துவள
புது மழையில் நீர்
வந்து முட்ட ,பாய்ந்து
வரும் நதியின் ஓசை
நதியின் கரைக்கு என்னை
அழைத்தது போல் ஒரு பிரமை
கால்போன போக்கில்சென்றேன்
நதியின் கரையை அடைந்தேன்
எனக்குமுன் அங்கு
ஓர் கொக்கு
ஒத்தைக் காலில் நின்றுகொண்டு
வருமீனுக்கு தவமாய்
காத்து நிற்க - என் காலடி
ஓசை கேட்டு சற்றே
என்னை திரும்பி பார்த்தது
எனக்கு புரிந்தது அதன்
பார்வையின் அர்த்தம்
'உனக்கேன் இந்த தனிமை
மனிதா முயற்சி
திருவினையாக்கும் ஆகா
தேடிப்பார் தனிமையை
வெல்ல தக்க துணைவியை நாடி'
என்று கூற நினைத்ததோ
மீனுக்கு தவமிருக்கும் கொக்கு!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Nov-17, 1:21 pm)
Tanglish : thanimai
பார்வை : 314

மேலே