அக்காள்

என் சமகாலத்திற்கு முன்பாகவே
நீ தோன்றிட வேண்டும் நீ உதித்த
கருவரையில் நான் முளைத்திட
வேண்டும் எப்பிறப்பிலும் .

உன் அறிவு என் சார்புடையதாக
உணருகிறேன் எச்சரிப்பதிலும்
கன்னத்தை கிள்ளி கொஞ்சுவதிலும்
பரிவோடு அழைப்பதிலும் மிளிரும்.

பலர் சொல்லும் வந்து விழுந்தது
நீ என்னை இடுப்போடு அன்பாய்
தரித்திருந்(தாய்) என்று நானும்
உணருகிறேன் உன் தொடுதலிலும்.

என் தனிமையில் உன் நினைவுகள்
இலையுதிர்கிறது குப்பையாக அல்ல
மீண்டும் அன்பு எனும் வசந்தகால
மரங்களுக்கு உரமாகும் நாளை.

நீ சிறு செடியாக வளர்ந்தாய் பின்பு
திருமணம் எனும் மரத்தில் படர்ந்தாய்
கொடியாய் இன்று குட்டி பூக்களை
சுமக்கிறாய் பூங்கொடி ஆய்.

எழுதியவர் : சூர்யா. மா (30-Nov-17, 2:36 pm)
சேர்த்தது : சூர்யா மா
Tanglish : akkaal
பார்வை : 164

மேலே