இதயத்தில் படிந்த பனித்துளிகள்

தலைப்பளித்த ஐயா பழனிகுமார் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.



உதிர்ந்த பூக்களை
உரசும் தென்றல்
என்ன சொல்லிப்போகிறது???

உடைந்து போன இதயத்தில்
வழியும் உதிரம்
உனக்கு புதிதா? என
விளக்கம் கேட்கிறதா???

இல்லை
ஊமைப்பெண்ணின்
உலர்ந்த கண்களை
வருடிச் செல்கிறதா??

விடியாத இரவுகள்
தலையணையின் ஈரத்தில்.....
தாகம் தீர்க்கிறதா.....

இல்லை
விளக்கொளியின் வெளிச்சத்தில்
விடியல் தேடுகிறதா...?

காற்றோடு பேசி சிரித்து
கடந்து போன சில நினைவுகள்...
கண்ணீரோடு உனை சுவாசிக்க
வைத்த போது..
கனத்த உன் இதயம்
என்ன சொல்கிறது?

அன்று சின்ன சின்ன மழைத்துளிகள்
செல்லமாய் உன் கைகளை முத்தமிட
சில்லென்ற காற்று உனக்குள்
சிகரம் தொட்ட உணர்வைத் தர....
சிலிர்த்துப் போனாயே...
அடிக்கடி.....
சிவந்தும் போனாயே......


அந்த நினைவுகள் எல்லாம் எங்கே.....?
வேறெங்கும் தேடாதே....
அத்தனையும் உனக்குள்ளே...
உன் இதயத்தில் படிந்த
பனித்துளிகளாய்........

எழுதியவர் : நிஷா (2-Dec-17, 8:06 am)
பார்வை : 437

மேலே