சிணுங்கல் ஓசை
கணுக்காலில் மாட்டிக்கொண்ட கொலுசே சிணுங்கத்தான் தெரிகிறதே....
சிணுங்கல் ஓசை கேட்டு
சிணுங்கும் சின்ன மாமன் பையன் நான்..!!
எனக்கும் சிணுங்கத்தான் தெரிகிறதே...
கணுக்காலை மட்டுமல்ல ...
மாட்டிக்கொண்ட என் கழுத்தையும்
இறுக்கும் உன் கால் கொலுசே..
கழுத்தில் பிறக்கும் உயிரெழுத்தையும் கொல்கிறதே..!
...
...
உயிரோடு உறவாட உள்ளத்தை அள்ளித்தா!
அள்ளித்தான் தந்தாலே!!
ஊஞ்சலில் தாலாட்ட மஞ்சக் கயிறொன்றை மாட்டி விடுவேனே....!!
மஞ்சள் கயிறானால் மாமன் நான் சாய்ந்திடுவேன்...
கயிறை மசக்கி மாமனை மார்போடு அணைத்துக் கொள்வாயா?
மார்போடு அணைத்துக் கொண்டால் மயங்கி விடுவேனோ...
மாபியா கொள்ளைக்காரி மாட்டிவிட்டேன் உன் மார்புச் சிறையிலே!
மாய்ந்து விடுவேனோ...!!!
மூச்சுக் காற்றை முந்தானையில் கட்டித் தா!!
முந்தானையில் முழித்தெழுந்தால் முத்தத்தால் மூழ்கடிப்பாயா?
மூழ்கி விட்ட என்னைத்தான் உன் கால் கொலுசுகள் எழுப்பிடுமா??

