உண்மை எதுவோ

பள்ளிப்பருவமா
இல்லை
மன்மதன் மனைவியின்
திருஉருவமா !

அழகுநடையா
இல்லை
வீதியில் அசைந்தாடிவரும்
தங்கத்தேரா !

புன்னகையா
இல்லை
புன்னகையை அரசாலும்
பெண்அரசியா !

இயற்கைமேனியா
இல்லை
விஸ்வகர்மாவால் அலங்கரிக்கப்பட்ட
பொன்மேனியா !

உன்னைக் கண்டால்
மன்மதனும் காதலில் விழுவான்
விநாயகப் பெருமானும்
காதல் வித்தைகற்க முற்படுவான் !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (2-Dec-17, 11:32 am)
பார்வை : 218

மேலே