ஆய்தம்
என் கற்பனையில் -ஃ
====================
ஃ (ஓசை:அக்கு,அக்) - ஆய்த எழுத்து.
ஓசை கொண்டு -அக்கு :
அ - உயிர் (முதல் உயிரெழுத்து.அது குறில் எழுத்து)
க் - மெய் (அதிலும் முதல் மெய் எழுத்து)
கு - உயிர் மெய் (அதுவும் வல்லின உயிர்மெய் எழுத்து)
~ பிரபாவதி வீரமுத்து
ஆய்தம் பார்ப்போம்
~~~~~~~~~~~~~~
ஃ என்பது (அக்கென்பது) ஆய்த எழுத்து.
ஃ - ஆய்த எழுத்து √ (ஆய்த எழுத்து என்பதே சரி .)
ஆயுத எழுத்து × (ஆயுத எழுத்தென்பது தவறு.)
ஆய்த எழுத்து .குறிலுக்கும் வல்லின உயிர்மெய்க்கும் இடையில் மட்டுமே வரும்.
உதாரணம் : எஃகு,அஃது
ஃ - அரை மாத்திரை
ஆய்த குறுக்கத்தில் - கால் மாத்திரை
தமிழனின் ஆயுதம் தாங்கியிருந்த எழுத்து.
வேறு பெயர்கள்:
அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி.