மணம் வீசும் மனம்
முயற்சி
கிழிந்ததை
தைத்துப் பார்த்தோம்
புதிதாக வாங்கும் முன்
பொறுமை
உடைந்ததை
ஒட்டிப் பார்த்தோம்
புதிதாக வாங்கும் முன்
தேடல்
தொலைத்ததைத்
தேடிப் பார்த்தோம்
புதிதாக வாங்கும் முன்
ஊடல்
பிரிந்தவர்
சேரப் பார்த்தோம்
வெறுத்து ஒதுக்கும் முன்
பொருளோ. உறவோ
தூக்கி எறியும் முன்
தூக்கிப் பாருங்கள்
மனம் மாறும்
மணம் வீசும் ..!
- பா. மாறன்