தமிழ் அன்னையே
தாயே!....
உன் முகமென்ன நிலவா
இல்லை மனமென்ன
கடலோ!.....
உயிரென்ன காற்றோ
இல்லை பெயரென்ன
தேனோ!....
உடலென்ன மரமோ
இல்லை மாங்கனியின்
சுவையோ!....
நீ அழகான பனியோ
இல்லை அரும்புகளீன்
இலையோ!.....
நிறமென்ன சிவபோ
இல்லை நீ சூரியனின்
நெருப்போ !.....

