தாயின் மரணம்

(ஏற்கனவே தந்தையை இழந்த இளைஞனை விட்டு, தன் தாயும் மறைந்த போது)

பத்து மாதம் சுமந்து என்னை,
பெத்தெடுத்து வளர்த்தவளே,
பாவம் என்ன நான் செய்தேன்,
இப்படி பாதியிலே விட்டுச் சென்றாய்.

தவமிருந்து பெற்ற என்னை,
தனியாக விட்டு விட்டாய்.
தவிக்கிறதே என் மனது,
தாயே நீ இல்லாமல்.

அருகில் நீ இருக்கையில,
உன் அருமை தெரியலையே.
தூரத்தில் நீ சென்ற பின்னே,
துவண்டு நானும் போனேனே.

கருவறையில் நான் உதைத்தபோது,
கருணையோடு ஏற்றுக் கொண்டாய்.
இப்போது ,காரணமே இல்லாமல்
எனை கைவிட்டு எங்கு சென்றாய்.

தாயைப் போல உறவு இங்கே,
தரணியிலே ஏதும் இல்லை.
அன்னை உன்னை இழந்த பின்னே,
அநாதையாகி நிற்கிறேனே!

எழுதியவர் : தங்க பாண்டியன் (3-Dec-17, 9:03 pm)
Tanglish : thaayin maranam
பார்வை : 1071

மேலே