மனதாள வருவாயா

உன்னை கண்ட அந்த நொடி என் உயிரும் நின்றதடி
உன் பெயர் கேட்க வந்தேன் என் உயிர் என்றதடி
உறக்கம் தொலைந்ததடி மனம் குழப்பம் கொண்டதடி
இரக்கம் காட்டடி என்னை கொல்வதும் ஏனடி!

பெண்ணின் பார்வை என்ன செய்யும் பெருமிதம் கொண்டேன் நானடி
உன் கண்கள் என்னை கைது செய்ய பேச்சிழந்தேன் இன்று ஏனடி
உன் கண்ணில் என்ன காந்தமா என்னை கவர்ந்திழுப்பதும் ஏனம்மா?
முன்ஜென்மத்தில் நீ என் மனைவியா அறிந்திடுவார் யாரம்மா!

உன் தலைமுடி கூட என்னை கலவரம் செய்யுதே
ஓர் தூக்குக்கைதி போல என் நிலவரம் கொடுமையானதே!
என் மனதில் உயிர் கோட்டை கட்டினேன் உனக்காகவே
என் மனதாள வருவாயா நானும் உயிர் பிழைக்கவே!

எழுதியவர் : சலோ (3-Dec-17, 11:43 pm)
பார்வை : 239

மேலே