குந்தன் - குந்தினி

ஏண்டி செவ்வந்தி, குசராத்தில இருக்கற உன்னோட அக்கா பூந்தளிருக்கு முதல் பிரசவம்னு சொன்னியே, கொழந்தை பொறந்திருச்சா? என்னடி செவ்வந்தி எனக்கு பதில் சொல்லாம, மெய்மறந்து பேனாவை காதுலவிட்டு கொடஞ்சிட்டு இருக்கற?
😊😊😊😊😊😊
உம்....வந்து...என்ன மன்னிச்சுக்கோங்க பாட்டிம்மா. குஜராத் அக்காவுக்கு போன மாசமே சுகப்பிரசவம் ஆகிருச்சுங்க பாட்டிம்மா.
😊😊😊😊😊😊
ஏண்டி பக்கத்துத் தெருவில இருக்கற நீ எங்கிட்ட ஒரு மாசம் கழிச்சா சொல்லறது? சரி. ஆண் கொழந்தையா பெண் கொழந்தையா?
😊😊😊😊😊😊😊
ரண்டும் தானுங்க பாட்டிம்மா.
😊😊😊😊😊😊
என்னடி செவ்வந்தி, சொல்லற?
😊😊😊😊😊
ரட்டைக் கொழந்தைங்க பாட்டிம்மா. ஒண்ணு ஆண் கொழந்தை. இன்னொண்ணு பெண் கொழந்தை.
😊😊😊😊😊😊
அட்ரா சக்கைன்னானாம். ஒரே பிரசவத்தில ஆணும் பொண்ணும். குடுத்துவச்சவடி உன்னோட அக்கா பூந்தளிர். சரி. கொழந்தைங்களுக்குப் பேரு வச்சிட்டாங்களா?
😊😊😊😊😊😊
வச்சுட்டாங்க பாட்டிம்மா. பையம் பேரு குந்தன்...
😊😊😊😊😊
பொண்ணு பேரு குந்தியா?
😊😊😊😊😊
குந்தி இல்லீங்க பாட்டிம்மா. குந்தினி.
😊😊😊😊😊
நல்லா வச்சாங்கடி பேரு. கந்தன்ங்கற பேரக் கேள்விப்பட்டிருக்கறேன். நம்ம முருகக் கடவுளத்தான் இந்திக்காரங்க இசுக்கந்தன் (ஸ்கந்தா)னு சொல்லுவாங்களாம். அந்த இசுக்கந்தனத்தான் நாம கந்தன்-னு சொல்லறோம். சரி பொண்ணுப் பேரு என்னன்னு சொன்ன?
😊😊😊😊😊😊
'குந்தினி' -ங்க பாட்டிம்மா.
😊😊😊😊😊😊
என்ன அநியாயம்டி இது. குசராத்தில இருந்தா இந்திப் பேரத்தான் வச்சுக்கணும்னு சட்டமா?
😊😊😊😊😊😊😊
இங்க மட்டும் என்ன வாழுதுங்க பாட்டிம்மா. என்னோட வயசு பசங்க பொண்ணுங்கள்ல எம் பேரும் எந் தம்பி தங்கமுத்து பேரும் மட்டுந்தான் தமிழ்ப் பேருங்க. பேருந்து ஏற நாலு கிலோ மீட்டரு நடந்து போகணும் நம்ம பட்டிக்காட்டு ஊர்ல இருந்து. இங்க 99% கொழந்தைங்க பேரெல்லாம் இந்திப் பேருங்கதான்.
😊😊😊😊😊
நம்ம கொங்கு நாட்டுலதான் உக்காருன்னு சொல்ல ' குந்து' -ன்னு சொல்லுவாங்க. உன்னோட அக்கா பொண்ணு இங்க வந்தா அவளக் 'குந்தினி' -ன்னு கூப்பிட்டா 'குந்து நீ' -ன்னு அவள உக்காரச் சொல்லற மாதிரியே இருக்கும்டி செவ்வந்தி.
காலம் மாறிப் போச்சுடி. படிச்சவங்க படிக்காதவங்க எல்லாம் சினிமாப் பாத்தே கெட்டுப் போயிட்டாங்கடி. தாய் தகப்பனையும் யாரும் மதிக்கறதில்ல. தாய் மொழியையும் மதிக்கறதில்ல. இந்திக்காரங்க நம்மளையும் நம்ம மொழியையும் ரொம்பக் கேவலமாப் பேசுவாங்கடி.
😊😊😊😊😊😊😊
நீங்க சொல்லறது நூத்துக்கு நூறு உண்மைதானுங்க பாட்டிம்மா.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க.

எழுதியவர் : மலர் (4-Dec-17, 12:23 am)
பார்வை : 175

சிறந்த நகைச்சுவைகள்

மேலே