சாசியா
யாருடி அங்க பரட்டத்தலையிலே சுருட்ட முடியோட போறது?
@@@@@
பாட்டிம்மா, நான் சென்னையிலே இருந்து உங்க ஊரு திருவிழாவைப் பாக்க வந்திருக்கிறேன். உங்க பக்தத்து வீட்டில இருக்கிறாளே மருதாணி , அவளும் நானும் வகுப்பு தோழிகள். ஒரே கல்லூரிலே படிக்கிறோம்.
😊😊😊😊😊
அது சரி. உம் பேரு என்ன?
😊😊😊😊😊
எம் பேரு ஷாஜி பாட்டிம்மா.
😊😊😊😊😊😊
என்னது 'சாசி' -யா? சாசி, ஓசின்னெல்லாம் பேரு இருக்குதா? என்ன அநியாயம்டி.
😊😊😊😊😊
எம் பேருக்கு 'துணிச்சலான'ன்னு அர்த்தம் பாட்டிம்மா.
😊😊😊😊😊
அதுதான் துணிச்சலா பரட்டைத் தலை சுருட்ட முடியக்கூட சரியா வாராம எங்க ஊருக்கு வந்தயா?
😊😊😊😊😊😊
பாட்டிம்மா, இந்த சுருட்ட முடிக்கு மாசம் ஐயாயிரம். ஒரு மாசத்துக்கு. இந்த மாதிரி அழகு நிலையத்தில முடியைச் சுருட்டையா பண்ணிக்கிறதுதான் இந்தக் காலத்து ஸ்டைலு.
😊😊😊😊😊😊
என்னடி இசுடைலு. வீண் செலவு பண்ணி முடிய சுருட்டையாக்கி தலை வாராம வர்றதுதான் இசுடைலா?
பொழப்புக் கெட்டதுங்க பொழப்பப் பாரு. நல்ல இருக்கற மூஞ்சியை கெடுத்துக்கறதா அழகு? இசுடைலாம் டைலு.
😊😊😊😢😢😢
?????????
@@@@@@@@@@@@@@@@@@@@@@#@######
சிரிக்க அல்ல. சிந்திக்க.