உண்மையான காதல் பிரிவதில்லை - தொடர்ச்சி
![](https://eluthu.com/images/loading.gif)
" ஜெனி! விடிஞ்சுடுத்து, எழுந்திரு. "
என்றவாறே படுக்கையறைக்கு வந்தார்கள் ஜெனிபரின் அம்மா.
படுக்கையில் ஜெனி இல்லை.
" ஹேய் ஜெனி! எங்க இருக்க? "
" நான் இங்கே இருக்கேன்மா. "
குளியலறையில் இருந்து ஜெனியின் குரல் வந்தது.
" என்னம்மா ஜெனி! சீக்கிரமே எழுந்திட்டியே. எப்போதும் காலைல நான் தானே உன்னை எழுப்புவேன். "
" அம்மா. ஆச்சரியப்பட்டது போதும். சாப்பாடு ரெடியாயிடுச்சா? "
என்று கேட்டபடியே குளித்து முடித்து மாற்று ஆடை அணிந்து ஜெனிபர் வெளிவந்தாள் குளியலறையில் இருந்து.
" அப்போவே ரெடி பண்ணிட்டேன் மா. அப்பா, வெயிட் பண்றாங்க. நீ சாப்பிட வா. " மேலும், " என்ன பொண்ணு நீ! தலையை இப்படியா துவட்டுவாங்க, " என்று சொல்லிக் கொண்டே ஜெனிபரின் அம்மா துணித்துண்டை வாங்கி அவள் தலையைத் துவட்டினார்கள்.
தாய், சேய் சம்பஜனைகளுக்கு மத்தியில், சாப்பாட்டு மேசையிலிருந்து, " பசி உயிர் போகுது. இரண்டு பேரும் இப்போ வரப்போறீங்களா? இல்லையா? ", என்றார் ஜெனிபரின் அப்பா.
" இதோ வந்துட்டோம்ங்க."
பதில் சொன்னவாறே படியிறங்கி வந்தார்கள் ஜெனிபரும், அவள் அம்மாவும்.
ஜெனிபருடைய அப்பா, அம்மா பற்றி சொல்லியே ஆக வேண்டும்.
அப்பாவின் பெயர் கனகராஜ்.
அம்மாவின் பெயர் மேரி.
இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்..
அவர்களின் காதல் பற்றி சொன்னால், ரோமியோ, ஜுலியட் காதலே தோற்றுப் போகும்.
அப்படிப்பட்ட காதல் அது..
அவர்களுக்குள் சண்டை வந்ததே இல்லை.
காரணம், சந்தேகம் வந்ததே இல்லை..
அவ்வளவு புரிதல் இருந்தது..
இப்படி மலரும் நினைவுகளுக்கு மத்தியில், " ஜெனி! என்னாச்சு? ஏதோ ஒரு மாதிரி இருக்கிறாய்? ", என்றார் கனகராஜ்.
" ஒன்னுமில்லை அப்பா. "
" உதடுகள் தான் ஒன்னுமில்லையென்று சொல்கிறது. ஆனால், உன் மனதில் ஏதோ குழப்பம் இருக்கிறது. "
" போதும், உங்கள் மனோதத்துவ டாக்டர் பட்டத்தைக் கொஞ்சம் தூக்கி வச்சுட்டு சாப்பிடுங்க. "
என்று மேரி குறுக்கிட்டார்..
" டிச்சர் அம்மா சொன்னதற்கு அப்புறம் பேச முடியுமா?! ", என்றவாறே அமைதியாக சாப்பிட்டார் கனகராஜ்.
சாப்பிட்டு முடிந்ததும், ஜெனி தன் அம்மாவிடம், " அம்மா, என் தோழி பிரியாவை பார்க்கப் போறேன். வர நேரமாகும். " ,என்றாள்.
" சரிம்மா. பத்திரமா பொய்ட்டு வா. "
அம்மா அனுமதியளித்தார்.
ஜெனி பேரூந்து நிலையம் வந்தாள்.
பேரூந்து வர சில நிமிடங்கள் இருந்தன.
ஏதேச்சையாக இடதுபக்கம் திரும்பினாள்.
ஜெகன் தனது மிதிவண்டியோடு நின்றிருந்தான்.
" ஹாய் ஜெகன்! "
என்றாள் ஜெனி.
" ஹாய் ஜெனி "
அசடு வழியுது ஜெகனின் முகத்தில்..
அது அவனுடைய கள்ளம், கபடமில்லா மனதைக் காட்டியது ஜெனிக்கு.
" நான் உன்ன பார்க்கத் தான் கிளம்புனேன். நீயே வந்துட்ட. "
" அப்படியா! "
" ஆமா. உன்கிட்ட கொஞ்சம் பேசனும். பீட்சுக்கு நான் போறேன். "
" ம்ம். சரி. "
பேரூந்து வந்தது. ஜெனி சென்று பேரூந்தில் ஏறிக் கொண்டாள்.
பேரூந்து புறப்பட்டது.
அரை மணி நேரமாகியது ஜெனி பீட்சில் வந்திறங்குவதற்கு.
இறங்கி வலது புறம் திரும்பிப் பார்த்தாள். ஜெகன் நின்றிருந்தான்..
" ஹேய் சீக்கிரமே வந்துட்டியா? சைக்கிளிலா வந்த?
" இல்ல. சைக்கிளை வீட்டில் விட்டுட்டு நடந்து வந்தேன். "
" என்னது! நடந்து வந்தியா? "
" ஆம். "
" அப்படினா எப்படி சீக்கிரம் வந்த? ஓடி வந்தியா? "
" இல்ல, குறுப்பாதையா நடந்து வந்தேன்.
நம்ம பேரூந்து நிலையத்தில் இருந்து ரோடு வழியா வந்தால் 5 கிலோமீட்டர். ஆனால், குறுக்கு வழியா நடந்து வந்தால் இரண்டு கிலோமீட்டர். பேரூந்து போக்கு வரத்து நெரிசலில் நின்று நின்று வரும். ஆனால், குறுக்குப் பாதையில் நடந்து வந்தால் நாம முன்னேறிக் கொண்டே இருக்கலாம். நெரிசலே இருக்காது. அதனால தான் 15 நிமிடங்களிலேயே வந்திட்டேன். "
" வாவ்! உனக்குள்ள இவ்வளவு அறிவா? "
" ஹேய் ஜெனி! சும்மா கல்லாய்க்காத! "
" நிசமாத்தான் பா சொல்லுறேன். உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கும். "
" அந்த எதிர்காலத்துல நீ என்கூட இருப்பியா? "
" என்ன சொல்ற? "
" ஐ லவ் யூ "
ஜெனி அமைதியாகிவிட்டாள்..
கடலலையில் இருவருடைய பார்வையும் புதைத்தன சில நிமிடத்துளிகள்..
" நானும் ஆதியும் காதலித்தது உனக்கு தெரியுமா? "
" ம்ம். தெரியும். "
" தெரிந்தும் எந்த நம்பிக்கையில் என்னிடம் ஐ லவ் யூ சொல்கிறாய்?. "
" நீ நல்லவள் என்ற அசையாத நம்பிக்கையில். "
" எதை வைத்து நான் நல்லவள் என்கிறாய்? "
" நான் என்னைப் பற்றி அறிந்ததைவிட உன்னைப் பற்றி அறிந்ததே அதிகம். நீ எங்கெல்லாம் சென்றாயோ, அங்கெல்லாம் நான் வந்தேன். "
" அப்படியென்றால் என் மீது உனக்கு சந்தேகமே எழவில்லையா?!. "
" இல்லை. நான் சந்தேகம் கொண்டேன், என்னிடமெல்லாம் நீ பேச மாட்டாயோயென்று. "
" ஹேய்! விளையாடாத. உண்மையை சொல்லு. "
" ஆதியைப் பற்றி தூண்டுச் சீட்டில் எழுதி போட்டது நான் தான்.
அன்று அவன் நண்பர்களிடம் பேசி கொண்டருந்ததைக் கேட்டேன். அதிலிருந்து தெரிந்தது நீ மாசற்ற தங்கமென்று. தங்கத்தை திருடுபோக விடலாமா? அதான் உன்னை எச்சரித்தேன். நீ நம்பல. உன் கண்ணால் கண்ட பின் நம்புகிறாய். "
" சரி. என்னை எப்போதிலிருந்து காதலிக்கிறாய்? "
" நான் பத்தாவது படிக்கும் போது உன்னை பார்த்தேன்.
அன்று மழை பேய்திருந்தது.
மர இலைகளில் மழைத்துளிகள் தங்கி இருந்தன.
அதற்கு வாடகை கேட்பது போல் காற்று அதிகாரி வீசினான்.
வாடகை தர இயலா மழைத்துளிகள் தவறி உன்மீது விழுந்தன.
அவற்றின் பரிஸத்தை நீ ரசிக்கையில் நான் உன்னைக் கண்டேன்.
அன்றிலிருந்து உன்னையே சுற்றி வந்தேன். "
" அப்படியா? நீ எப்போது பத்தாம் வகுப்பு படித்தாய்? "
" 2011 "
" அடப்பாவி! அப்போ நான் எட்டாவது தான் படித்துக் கொண்டிருந்தேன். "
" ம்ம். அப்பவே நீ தேவதை தான். "
" ஆமா. கிட்டத்தட்ட பத்து வருடங்களா என் பின்னாடி சுத்தியிருக்க. ஏன் என்கிட்ட வந்து பேசல? "
" பேசத்தான் ஒவ்வொரு முறையும் வருவேன்.
ஆனால், உன் அழகில் என்னை மறந்துவிடுவேன். "
" சரி. உன் பேச்சில் நான் என்னை மறந்துவிட்டேன். நேரமாகிவிட்டது. நான் கிளம்புறேன். "
" ம்ம். பத்திரமா பொய்ட்டு வா. "
சிரித்து முகம் சிவந்தவள் வீடு நோக்கி நடந்தாள் பேரூந்தை மறந்து.