கரை சேரும் கருணை இல்லம்

அம்மா ............



உதிர மண்ணெடுத்து !!!
கச்சிதமாய் கருவில் பிசைந்து !!!!
நமக்கு உருவம் கொடுத்தவள் !!!!
அம்மா ............



வளர இதயம் கொடுத்த
ஒரு புதுமையைத்தான்
சிலர் வளர்ந்த பின் எனோ
வெறுக்கிறார்கள்
அவள் முதுமையைத்தான்.......




வீடுகள் இருக்க வீதிகளில்
சேர்கிறான் தன் தாயை
கருணை உள்ளம் அற்றவன்
கருணை இல்லத்தில்



மீண்டு வர...
மீண்டும் வருகையை எதிர்பார்த்து
மூடி கிடக்கிறது ஒரு முதியோர் நூலகம்.......
மனதை திறந்து படிக்க தன் சொந்தங்கள்
வருமா என்று .....



இதயம் இருப்பவனுக்கு தாய் பெரும் அழகு
இதயம் இறந்தவனுக்கு தாய் பெரும் செலவு .........


என்னை பொறுத்தவரை அவளை போல
புதையல் ஏதும் இல்லை அண்டத்தில் !!!!

அவள் இதயம் திறந்து பாருங்கள்
அதிலும் நீங்கள் தான் இருக்கிறேர்கள்
என்று அறியும் பொழுது .....



இதன் உண்மை புரியும் உங்களுக்கும் !!!!!!

எழுதியவர் : அம்மா (5-Dec-17, 3:07 pm)
பார்வை : 299

மேலே