MODERN MORNING

சுடிதாரில் சுப்பாயி வேலைக்காரி வாசலில்
தண்ணீர் தெளித்தாள்
மடிசாரில் மாமி மங்களகரமாய்
வாசலில் கோலமிட்டாள்
பஞ்சகச்சத்தில் மாமா ஆலயத்திலிருந்து
அர்ச்சித்த பூத் தட்டுடன் வந்தார்
பெர்முடாவில் அமெரிக்கப் பிள்ளை
வாஷ் பேசினில் காகளித்தான்
ஜீன்ஸ் டாப்பில் தமிழ் மருமகள்
பெட் பிளாக் காபி அருந்துகிறாள் !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Dec-17, 8:47 am)
பார்வை : 169

சிறந்த நகைச்சுவைகள்

மேலே