உணர்வாய் மனிதா
ஓடி ஓடி உலகில் பணம் ஓயாமல் சேர்க்கின்றாய்
கூடித் திரிகின்றாய் குதூக லத்தில் மிதக்கின்றாய்
நாடி வந்து இரப்போர்க்கு ஈயாமல் நகைக்கின்றாய்
சோடியாய் வாழுதற்கு மாளிகை பல அமைக்கின்றாய்
ஆடிக் களைத்து ஆவி அடங்கும் நாள் வந்தால்
கோடி உனக்கு இருந்தும் என்ன பயன் புகழ்
கூடி இருந்தும் உனக்கு என்ன பயன்
ஆறடி நிலம் தானடா உன் சொந்தம்
இதைப் புரிவாயா உணர்வாயா மனிதா நீ ?
ஆக்கம்
அஷ்ரப் அலி