நிலவும் என் கனவும்

நிலவே
நீயே எனது கனவுத்தொழிற்சாலை
என் மழலைப்பருவத்தில்
வானம் ஏறி உன்னைத் தழுவிட நினைத்தேன்
இன்றோ...
என் கனவுகள் எத்தனை ஆயிரம்
ஆயிரம்!!!
அத்தனை கனவுகளையும் உச்சத்தில்
வைத்தேன்
நிலவே
நீ உச்சத்தில் இருப்பதாலே...
அ.ஜுசஸ் பிரபாகரன்