என் கல்லூரி நினைவுகள்

என் கல்லூரி 🏢வாழ்கை முடிந்த பிறகு நான் மீண்டும் என் கல்லூரிக்கு🚶ஒரு நாள் சென்று வந்தேன்.........
கல்லூரியில் பல மாற்றங்கள்........
முதல் மாறுதல், மாணவனாய் சென்ற நான் அன்று பழைய மாணவனைய் அறிமுகம் செய்துகொண்டு உள்ளே சென்றேன்......
🚶🚶🚶🚶
கல்லூரி படிகட்டுகளில் முன்னோக்கி ஏறினேன், என் கல்லூரி நாட்கள் பின்னோக்கி அழைத்தது..........
அதே படிகட்டில் நண்பர்களோடு சேர்ந்து அரட்டை அடித்தது, சண்டையிட்டது, வம்பிற்கிளுத்தாய் பல ஞாபகங்கள் என்னுள்..........
தனிமை 🚶 உணர்ந்ததில்லை நான்.....
அன்று உணர்ந்தேன் என் நண்பர்கள் இல்லாத கல்லூரியில் நான் மட்டும் நடந்தபோது.........
என் கண்கள் தேடிசென்று நின்றது எங்களது வகுப்பறையில்.......
என்னை வரவேற்று கண்ணீர் சிந்துவது போல் உணர்ந்தேன்.........😢
என் இருப்பிடத்தை பார்த்த போது........
மௌன மொழி பேசி எனது இருப்பிடம் என்னிடம் கேட்டது நீ மட்டும் தான் வந்தாயா என்று.........🚶
இதயம் கனைத்து அறியாமல் ஓர் வலி என்னில் தோன்ற.......😢
என் சந்தோஷத்தை மட்டுமே பார்த்த என் இருப்பிடம் என் சோகத்தையும் பார்த்தது.....😢
என் இருக்கையில் கிறுக்கி வைத்த என் நண்பர்களின் பெயர்களை தொட்டுபார்த்து கலங்கிய கண்கள்.....😭
கண்ணிரை துடைத்துக் கொண்டு மெல்ல நடந்தேன் கல்லூரி உணவகத்தை நோக்கி,🚶
ஒரு டீ வாங்கி ஒன்பது பேர் குடிக்கும் போது உள்ள சுகம், தனியாக அன்று குடிக்கும் போது கிடைக்கவில்லை.........🍷
நாங்கள் பொழுது கழித்த இடங்களில் நான் மட்டும் நின்று சற்று நேரம் கல்லூரி நாட்களில் மீண்டும் வாழ்ந்து பார்த்தேன்........
நான் கிளம்பும் நேரம் கல்லூரியை ஏற இறங்கப் பார்த்து விட்டு பெருமூச்சு விட்டு திரும்பி நடந்தேன்.......🚶
என் உடல் மட்டும் திரும்பி நடந்தது,
என் நினைவுகள் அனைத்துமே எங்கள் கல்லூரியையே சுற்றி திரிந்தபடி..................
மீண்டும் கிடைக்காத நிமிடங்கள் கல்லூரி வாழ்க்கை மட்டுமே............
நீங்கள் சந்தோஷமாக இருந்த நாட்களை நினைவுபடுத்தி வாருங்கள்...............😂😂
பல்வேறு இடங்களைச் சேர்ந்த மாணவர்களை ஒன்று சேர்க்கும் college க்கும் , நட்போடு பழகும் நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி ...............