இலக்கியக் காதலி

இலக்கியக் காதலி
எப்போதும் என்னில் இருந்ததோ தலைக்கனம்
உன்னால் நான் பயின்றதோ தொல்காப்பியம்
இந்நாள் வரை எனக்கு பிடித்தது இதிகாசம்
உன்னால் என்னை ஆட்கொண்டதோ இலக்கியம்
இதுவரை நான் கற்றதோ புறநானூறு
நீ எனக்கு கற்பிப்பதோ அகநானூறு

உன்னால் நான் பெற்றது இனியவை நாற்பது
உலகத்தின் வழியாய் கற்றது இன்னா நாற்பது
உன்னை எனக்கு அறிமுகப்படுத்தியதோ எட்டுத்தொகை
என்னை பாடவைத்ததோ பத்துப்பாட்டு
காலமெல்லாம் இணைய வைப்பது பதினென்கீழ்க்கணக்கு
இறைவனுக்கு நான் படைப்பதோ பன்னிருதிருமுறை

உன்னையும் என்னையும் இணைத்தது சமய சாத்திரம்
உனக்காக நான் புனைவதோ இப் பிரபந்தம்
என்றும் நாம் வாழ்வு ஒரு அன்புப் புராணம்
நாளை உலகிற்கு பெரும் காப்பியம்
தமிழில் எனக்கு பிடித்தவனோ பாரதி
உன்னால் உருமாறிய நான் உன்(பாரதி) தாசன்

இனி உன் சொல்லே எனக்கு வேதம்
என்றும் நான் செய்யப் போவதில்லை விவாதம்
வேண்டுவதோ உன்னுடன் விவாகம்
உன்னுடன் வாழ விழைவதே விவேகம்
இருவரும் படைப்போம் இலக்கியம்

ராரெ

எழுதியவர் : ராரே (6-Dec-17, 10:24 pm)
பார்வை : 85

மேலே